சுற்றறிக்கை: 496/2019
தேதி:16.2.2019
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளைகள் கவனத்திற்கு...
குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் அடிப்படை என்பதை கொள்கையாக கொண்டு பிரச்சாரம் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு பலர் தங்களை ஜமாத்தில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைபவர்களை அங்கிகரிக்கும் வகையில் உறுப்பினர் அட்டை மாநில தலைமை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு வழங்கப்படும் உறுப்பினர் அட்டைக்கு மூன்று ஆண்டுக்கு இருநூறு ரூபாய் என நிர்ணயம் செய்து அறிவிப்பு செய்து இருந்தோம்.
13.2.2019 புதன் கிழமை கூடிய மாநில நிர்வாக குழுவில் முந்தைய அறிவிப்பை மாற்றி அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன் படி இனி உறுப்பினர் அட்டைக்கு மூன்று ஆண்டுகளுக்கு நூறு ரூபாய் மட்டும் வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மாவட்ட, கிளை நிர்வாகிகள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு உறுப்பினர் அட்டைக்கு நூறு ரூபாய் மட்டும் அனுப்பி வைக்கவும்.
மேலும் விபரங்களுக்கு:
சித்திக் மாநில பொருளாளர்.
ஆவடி இப்ராஹீம் மாநில செயலாளர்.
ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
No comments:
Post a Comment