Monday, February 25, 2019

மாநில சுற்றறிக்கை: 502/2019


சுற்றறிக்கை: 502/2019
தேதி:24.2.2019

குர்ஆன் வினியோகம் குறித்து...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு...

திருக்குர்ஆன் மாநாட்டுப்  பிரச்சாரப் பணிகளை கிளை மாவட்டங்கள்  மிக சிறப்பாக செய்து முடித்தீர்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் போதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை முஸ்லிம் அல்லாத மக்களிடமும் கொண்டு சேர்த்தது சிறப்பிற்குரிய பணியாகும்.

மாநாட்டு பணிகள் காரணமாக மாவட்டங்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  மொத்தமாக மாநிலத் தலைமை  வழங்கி வந்தது, தற்போது மொத்தமாக வழங்குவதில்லை என்ற அறிவிப்பு மாவட்டங்களுக்கு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டுப்  பிரச்சாரத்தின் காரணமாக முஸ்லிம் அல்லாத பலரும் படிப்பதற்கு  திருக்குர்ஆன் கேட்பதாகத் தகவல் வருகிறது.  TNTJ பப்ளிகேசனின் புதிய வெளியீடான "மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன்"  புத்தகம்  முஸ்லிம் அல்லாத மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் போதனைகளை தொகுத்து வெளிவந்துள்ள இந்தப்  புத்தகத்தை முதலில் படிப்பதற்காக கொடுக்கவும்.  இந்த நூலைப் படித்த பின்னரும் திருக்குர்ஆன் படிக்க கேட்டால் சம்மந்தப்பட்ட நபரின் முகவரியுடன் போஸ்ட் கார்டு வழியாக மாநில தலைமைக்கு கடிதம் போட்டால் உரியவருக்கு திருக்குர்ஆன் அனுப்பி வைக்கப்படும் என்பதை இதன்மூலம் தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

No comments:

Post a Comment