Tuesday, February 26, 2019

மாநில சுற்றறிக்கை: 503/2019


சுற்றறிக்கை: 503/2019
தேதி:26.2.2019

கோடை வெப்பத்தை தனிக்க தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்.

கிளை,மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தினால் உடலில் உள்ள  நீர்ச் சத்து விரைவில் குறைந்து தண்ணீர் தாகம் அதிகமாக ஏற்படுகிறது.

ஏழைகள், வேலைக்கு செல்லக்கூடியவர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல தரப்பு மக்களுக்கும் இது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இதை எதிர்கொள்வதற்கு நாம்  தண்ணீரை அதிக அளவில் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

கோடை வெப்பத்தால் ஏற்படும்
பொது மக்களின்
தண்ணீர் தாகத்தை போக்கிட
இஸ்லாமிய மார்க்கம் காட்டித்தந்த பிறரின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்திடுமாறு மாவட்ட கிளைகளுக்கு வலியுறுத்துகிறோம்.

மனிதர்களுக்கு இறக்கம் காட்டாதவனுக்கு இறைவன் இறக்கம் காட்ட மாட்டான்.
(நபி மொழி)

இப்படிக்கு

இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

No comments:

Post a Comment