மாவட்ட சுற்றறிக்கை: KK/59/2019
தேதி : 17.10.2019
தலைப்பு : டெங்கு காய்ச்சல் - விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்பாக
அன்பிற்குரிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.
தமிழக அளவில் டெங்கு காய்ச்சல் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது.
போதிய சிகிட்சை கிடைக்காத பட்சத்தில் உயிருக்கே கூட ஆபத்தினை விளைவிக்கக் கூடிய வகையிலான கொடிய நோயாக தற்போது இதனைக் குறித்து பல சுகாதார அமைப்புகள் கருத்து தெரிவிக்கின்றன.
எனவே நமது கிளைகளில் நாமும் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களிடையே அதிகம் கொண்டு செல்வது அவசியமானதாகும்.
நோட்டீஸ்கள், சுவரொட்டிகள், பிளக்ஸ்கள், தெருமுனை பிரச்சாரங்கள் போன்றவை வாயிலாக இந்த நோயின் தீவிரத்தன்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, இந்த நோய் தாக்காமல் நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி, இதன் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன என்பன தொடர்பாகவும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
மேலும், பொது மக்கள் அதிகம் கூடுகின்ற பகுதிகளில் இலவச நிலவேம்பு கஷாயங்கள் வழங்குதல் , இயன்றால் மருத்துவ பரிசோதனை முகாம்கள் போன்றவற்றை நடத்துதல் என அதிகமான மக்கள் நலப்பணிகளில் அனைத்து கிளைகளும் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மாவட்ட நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்

No comments:
Post a Comment