Saturday, September 17, 2022
வட மாநிலங்கள் பாணியில் தமிழகத்திலும் மதவெறி தாக்குதல் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடுமையான கண்டனம்
சுற்றறிக்கை : 76/ 2022
தேதி - 17.09.2022
இறைவனின் திருப்பெயரால்…
கண்டன அறிக்கை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
வட மாநிலங்கள் பாணியில் தமிழகத்திலும் மதவெறி தாக்குதல்
_தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடுமையான கண்டனம்.
வட மாநிலங்களில் தான் மதவெறி கொண்டு சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களை தாக்க கூடிய சம்பவங்கள் அரங்கேறும். தற்போது சமூக நீதி ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்லக்கூடிய தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று சென்னை கோடம்பாக்கம் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுவனை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தாக்கியுள்ளார்.
தாக்கும் நேரத்தில் உனக்கு தொப்பி ஒரு கேடா என்று தாக்கியது சமூகத்தில் மிகப்பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அவனுடைய ஆடைகள் கிழியும் அளவிற்கு தாக்கியுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் மீது வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.
அமைதி பூங்கா தமிழகத்தை மதவெறி தேசமாக மாற்ற துடிக்கும் இது போன்ற சங்பரிவார சிந்தனை கொண்டவர்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்.
சங்பரிவார கும்பலின் இத்தகைய மதவெறிச் செயல் துவக்கத்திலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை அடுத்து இந்த செயல் செய்ய நினைக்க கூடியவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.
இச்செயல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஆர். அப்துல் கரீம்.
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment