Wednesday, June 29, 2022
உதய்பூர் டெய்லர் படுகொலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்:
Monday, June 13, 2022
இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச்சூடு! இடிக்கப்படும் வீடு!! தொடரும் பாஜகவின் தேச விரோத செயல்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்
Monday, May 16, 2022
கியான்வாபி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்
கியான்வாபி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவு - 1991 வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பான சட்டத்திற்கு மாற்றமாக மீண்டும் ஒரு அராஜகம் அரங்கேறுகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.
பாபர் மஸ்ஜிதை போலவே நீதிமன்றம் மூலமாக வாரணாசி கியான்வாபி மசூதியையும் பறிக்க சங்பரிவார சிந்தனை கொண்டவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதற்காகவே தொடர்ச்சியாக நம்பிக்கையின் அடிப்படையில் வழக்குகளை தொடர்ந்து வருகின்றனர். மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜய் சங்கர் ரஸ்தோகி என்ற வழக்கறிஞர் வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் சுயம்பு ஜோதிர்லிங்கா பகவான் விஸ்வேஸ்வர் சார்பாக ஒரு மனுவை தாக்கல் செய்கின்றார். அதில் கியான்வாபி மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டதா? என்று உண்மையைக் கண்டறிய அப்பள்ளி அமைந்திருக்கும் பகுதியை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
சுபாஷ் நந்தன் சதுர்வேதி என்ற வழக்கறிஞர் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றில் சிவலிங்கம் இருந்ததாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
வாரணாசியில் உள்ள நீதிமன்றம் கியான்வாபி மசூதியின் கட்டமைப்பை விசாரிக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கியான்வாபி மசூதிக்கும் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு இடையில் உள்ள மேற்கு பக்க சுவரின் வெளிப்புறத்தில் சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்திருக்கின்றது. இதை, காசி விஸ்வநாதர் கோயிலின் முக்தி மண்டபத்தில் இருந்தபடி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும். இந்நிலையில், அம்மனை தினமும் தரிசிக்க அனுமதி கோரி ராக்கி சிங், மஞ்சு வியாஸ், சீதா சாஹு, லட்சுமி தேவி, ரேகா பத்தா ஆகிய ஐந்து பெண்கள் மூலமாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மசூதி வளாகத்தில் இந்து மத வழிபாட்டுச் சின்னங்கள் இருப்பதாகக் கூறப்படுவதில் உள்ள உண்மையைக் கண்டறிய கியான்வாபி மஸ்ஜிதை கள ஆய்வு நடத்த குழு அமைத்தது நீதிமன்றம்.
பாபர் மசூதி விஷயத்தில் நீதியை எதிர்பார்த்து காத்திருந்த முஸ்லிம்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து பாபர் மசூதி முஸ்லீம்களிடமிருந்து அநியாயமாக பறிக்கப்பட்டது. அதே நிலை கியான்வாபி மசூதியில் ஏற்பட்டு விடக்கூடாது என்று முஸ்லிம்கள் தொடர் சட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கியான்வாபி மசூதிக்கு சீல் வைக்க நீதிமன்றமே தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
1991 வழிபாட்டு தலங்கள் சட்டம், (The Places Of Worship Act, 1991), பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி நிலப்பிரச்சினை தவிர்த்து, 15 ஆகஸ்டு 1947க்கு முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும், 15 ஆகஸ்டு 1947 க்கு முன்னர் வழிபாட்டுத் தலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது என்றும் இச்சட்டம் கூறுகிறது.
ஆக்கிரமிக்கப் பட்ட இடமாக இருந்தால் கூட வழக்கு தொடுக்க சட்டத்தில் இடம் இல்லை. ஆனால் இது ஆக்கிரமிக்கப் பட்ட இடம் இல்லை என்று தெளிவாக தெரிந்தும் மத மோதலை ஏற்படுத்த வேண்டும் என்று சங் பரிவார சிந்தனை கொண்டவர்கள் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.
மத நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி மத வெறி அரசியல் நடத்தும் சங் பரிவார சிந்தனை கொண்டவர்களின் இந்த முயற்சிகளுக்கு நீதித்துறை தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே இந்தியர்களின் எண்ணமாக உள்ளது.
இப்படிக்கு
ஆர். அப்துல் கரீம்.
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
Tuesday, March 15, 2022
கர்நாடக நீதிமன்றத்தின் காவிமயத் தீர்ப்பிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.
இறைவனின் திருப்பெயரால்..
ஹிஜாப் தடை செல்லும்: கர்நாடக நீதிமன்றத்தின் காவிமயத் தீர்ப்பிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.
ஹிஜாப் தடை செல்லும் என கர்நாடகா நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
உலகஅளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று (15.03.2022) வெளியிட்டது.
ஏற்கனவே எரிந்து நாசமாகி வரும் இந்தியாவின் மதச்சார்பின்மை மீது ஒரு கேலன் பெட்ரோலை ஊற்றியிருக்கிறது கர்நாடகா உயர்நீதிமன்றம்.
ஹிஜாப் இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை எனவும் எனவே ஹிஜாபை முஸ்லிம்களின் அடிப்படை உரிமை என எடுத்துக் கொள்ள முடியாது எனவும் இதனால் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியத் தடை விதித்தது செல்லும் எனவும் விஷம் கக்கியிருப்பதுடன் ஹிஜாபுக்கு ஆதரவாக தொடுக்கப்பட்ட சுமார் 140 ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது,
ரிதுராஜ் அவஷ்தி, ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீர்ஷித் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு தான் இந்த அநியாயத் தீர்ப்பை வழங்கியிருக்கின்றது.
காவி அணியும் சங்பரிவாரத்தினர் கூறித்திரியும் நச்சுக் கருத்துக்களைத்தான் கருப்புச் சட்டை அணிந்த இந்நீதிபதிகள் தங்கள் வாய்களால் வாந்தி எடுத்துள்ளனர்.
இது ஒரு காவிமயமான தீர்ப்பு என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. இந்த தீர்ப்பைத் தான் இவர்கள் தரப்போகிறார்கள் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.
இது போன்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான தீர்ப்புகள் பன்னெடுங்காலமாகவே இந்திய நீதிமன்றங்களால் சொல்லப்பட்டு வருகிறது.
450 ஆண்டு பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித் இடம் இராமருக்கே சொந்தம் என்று ஒரு நீதிபதி அபத்தம் நிறைந்த தீர்ப்பளித்ததும் , இந்த அநியாயத் தீர்ப்பை உச்சரித்த நீதிபதிக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டதும் நாம் கேள்விப்பட்டது தானே!
முத்தலாக் பிரச்சனை , குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் திருத்த மசோதா என்ற எந்த அநியாயச் சட்டங்களையும் தடுத்து நிறுத்தாத நீதிபதிகள் வாழும் இந்தியாவில் இது போன்ற தீர்ப்புகள் வருவது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல.
இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்று திருமறைக் குர்ஆனிலும் நபிகள் நாயகத்தின் போதனைகளிலும் வந்துள்ளது.
நபியே! தமது தலைமுக்காடுகளைத் தொங்கவிட்டுக் கொள்ளுமாறு உமது மனைவியருக்கும், உமது பெண் மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும் கூறுவீராக!
(அல்குர்ஆன் 33: 59)
நபியின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! (நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தமது தலைமுக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின்மீது போட்டுக் கொள்ளட்டும். ! எனும் திருக்குர்ஆனின் (24:31 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழ்ஆடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் தலைமுக்காடாக ஆக்கி(மறைத்து)க் கொண்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (4758
இவை போன்ற பல செய்திகளில் ஹிஜாப் கட்டாயம் என்பது இஸ்லாத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ள நிலையில்
அது இஸ்லாத்தில் கட்டாயமில்லை என்று இவர்கள் தீர்ப்பு கூறுகிறார்கள் எனில் இந்த நீதிபதிகளின் புத்திக் கூர்மையை என்னவென்று சொல்வது.
ஆளும் பா.ஜ.க இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் தரமாட்டோம். அவர்களை இங்கு நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்பதைத் தான் நீதிமன்றங்கள் மூலம் சொல்ல நினைக்கின்றனர்.
அரசியல் தனமான காவிச்சிந்தனை மிக்க இந்த அநியாயத் தீர்ப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிப்பதுடன் இந்திய முஸ்லிம்கள் இறைவனின் துணை கொண்டு இது போன்ற அநியாயங்களுக்கும் இதை அரங்கேற்றிவரும் காவிகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு.
ஆர். அப்துல் கரீம்.
பொதுச் செயலாளர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
Wednesday, March 9, 2022
பெண்ணைக் காக்கும் ஹிஜாப்
இறைவனின் திருப்பெயரால்..
பெண்ணைக் காக்கும் ஹிஜாப்
ஈர்ப்புடன் படைத்த இறைவன்
இறைவன் எல்லா ஜீவராசிகளையும் ஆண், பெண் என்று ஜோடி ஜோடியாகப் படைத்தான். பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதனும் அவ்வாறே படைக்கப்பட்டுள்ளான்.
மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட பருவத்தை அடையும் போது அவர்களுக்கான பாலியல் தேடல்கள் மேலோங்குவது இயற்கையே.
இந்தத் தேவைகளை திருமணம் என்ற கண்ணியமான உறவின் மூலமே ஒரு ஆணும் பெண்ணும் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர தவறான வழிகளை நாடலாகாது என்று இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.
ஆணும் பெண்ணும் தன் வாழ்வில் ஒழுக்கம் பேணுவதற்கான எல்லா ஒழுக்க மாண்புகளையும் இஸ்லாம் வரையறுத்துள்ளது.
பார்வையை தாழ்த்துதல், நெறியுடன் பேசுதல் என்று இவை போன்ற போதனைகள் மூலம் அனைவரும் கற்புநெறியுடன் வாழ்வதற்கு இஸ்லாம் வகை செய்கின்றது.
அன்னியருக்கு முன்னால் கண்ணிய ஆடை:
ஒரு பெண் தன் உடலின் முகம், முன்கை, கால்பாதம் தவிர ஏனைய பாகங்களை அன்னிய ஆடவர்களை விட்டும் மறைத்துக் கொள்ள வேண்டும். இதுவே பெண்கள் கற்பொழுக்கம் பேணுவதன் முக்கிய அம்சமாகும்.
இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தமது கற்பு நெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும். அவர்கள் (சாதாரணமாக) வெளியில் தெரிவதைத் தவிர தமது அலங்காரத்தில் வேறு எதையும் (அன்னியர்களிடம்) வெளிப்படுத்த வேண்டாம். தமது தலைமுக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின் மீது போட்டுக் கொள்ளட்டும். அல்குர்ஆன்: 24: 31
*கண்ணுக்கு இமை பெண்ணுக்கு ஹிஜாப்:*
பெண்கள் அணியும் ஹிஜாப் ஆடை அவர்களின் கற்புக்கு பெரும் பாதுகாப்பு என்று திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது.
நபியே ! தமது தலை முக்காடுகளைத் தொங்கவிட்டுக் கொள்ளுமாறு உமது மனைவியருக்கும், உமது பெண் மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும் கூறுவீராக ! அதுவே அவர்கள் அறியப்படுவதற்கும், தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்புடையது. அல்லாஹ் மன்னிப்பு மிக்கவனாகவும் நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன்: 33: 59
இஸ்லாம் கூறும் கண்ணிய ஆடையை அணியாத பெண்கள் அன்னிய ஆடவர்களால் பரிகசிக்கப்படுவதையும், பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுவதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம். கண்ணை இமை காப்பது போல் பெண்ணை ஹிஜாப் காக்கின்றது.
பர்தா ஆடையால் பரிபோகிறதா பெண்ணுரிமை.?
ஹிஜாப் ஆடை அணியச் செய்வதன் மூலமாக பெண்களின் உரிமையை இஸ்லாம் பறிப்பதாக சிலர் கருதுகின்றனர். பெண்களுக்காக குரல் கொடுப்போர் எவரும் இல்லாத காலகட்டத்திலேயே பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டிய மார்க்கம் இஸ்லாம். அவர்களுக்கு சொத்துரிமை, கல்வி பெறும் உரிமை. திருமண உரிமை, விவாகரத்து உரிமை, வழிபாட்டு உரிமை என்று நியாயமான எல்லா உரிமைகளையும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியது.
ஹிஜாப் அணியச் சொல்வது அவர்களின் பாதுகாப்பிற்காகவும், நல்லொழுக்கம் பேணுவதற்கும் தானே தவிர. அதில் எந்த உரிமை மறுப்பும் இல்லை. பர்தா அணிவதால் ஒரு பெண்ணுக்கோ, ஒரு தேசத்திற்கோ எந்தப் பாதிப்பும் இல்லை . மாறாக பாதுகாப்புதான் உள்ளது. இதை அனைவரும் உணர வேண்டும்.
*ஹிஜாப் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமை:*
நம் இந்திய நாடு பல மத, இன, மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட பரந்த நாடு எனவே தான் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற தருணத்தில் இது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மதச்சார்ப்பற்ற ஜனநாயக நாடாகக் கட்டமைக்கப்பட்டது.
பலதரப்புமக்களில் எவருக்கும் பாதகம் ஏற்படா வண்ணம் அரசியல் சாசனச் சட்டமும் ஏற்படுத்தப்பட்டது.
அதில் ஒவ்வொரு மதத்தவருக்கும் தேவையான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன.
ஒவ்வொருவரும் தான் விரும்பும் மதத்தை கடைபிடிக்க, பரப்ப உரிமை உள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் அத்தியாயம் 25
ஒரு அரசு எந்தக் குடிமகனையும் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடத்தின் அடிப்படையில் பாகுபாடாக நடத்தக்கூடாது . அரசியலமைப்புச் சட்டம் அத்தியாயம்: 15
சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களின் மொழி, எழுத்து, கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாக்க அவர்களுக்கு உரிமையுண்டு. அரசியலமைப்புச் சட்டம் 29
இவ்வாறு தெளிவாக மதச்சார்பின்மை பற்றி கூறப்பட்டிருக்கும் போது இந்த சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டு முஸ்லிம்களின் ஹிஜாப் உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. இதை ஏற்க முடியாது.
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் உரிமை. சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லுரிக்கு வரக்கூடாது என்ற விவகாரத்தை ஒரு தேசவிரோதக் கும்பல் கிளப்பியிருக்கின்றது.
முஸ்லிம்கள் இறைவனுக்கு மட்டுமே அஞ்சக்கூடியவர்கள் , ஹிஜாப் உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.
உரிமையை நிலைநாட்ட களம் கண்டு வரும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு இறைவன் வெற்றியை அளிப்பானாக.