சுற்றறிக்கை: 499/2019
தேத:18.2.2019
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தை பயனுல்லதாக கழிக்கும் வகையில் மாணவர்களுக்கான சம்மர் வகுப்புகள் நடத்தப்படு வருகிறது.
அல்ஹம்துலில்லாஹ்..
அது போல 2019ம் ஆண்டும் வரும் ஏப்ரல் 22 முதல் மே 2 வரை கிளை, மாவட்டங்களில் கோடைகால சம்மர் வகுப்புகள் நடத்தவும்.
தங்கள் மாவட்டத்தில் கிளைகள் மற்றும் மாவட்டம் சார்பில் கோடைகால வகுப்பு நடத்தினால் tntj.net ல் உள்ள அதற்கான படிவத்தை பூர்த்தி செய்தி வரும் 12.3.2019 ம் தேதிக்குள் மாநில தலைமைக்கு கிடைக்கும் படி அனுப்பி வைக்கவும்.
அதில் ஆண்களுக்கு, பெண்களுக்கு என தனியாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களை கொண்டும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
தலைமைக்கு அனுப்ப வேண்டிய படிவம்,சம்மர் வகுப்பில் பாடமாக நடத்தப்பட வேண்டிய புத்தகத்தின் லிங் கீழே..
https://www.tntj.net/summer-class/
அதற்கான பொறுப்பாளர்கள் மாநில செயலாளர்கள் இ.பாரூக், பைசல் ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
No comments:
Post a Comment