Monday, July 8, 2019

மாவட்ட சுற்றறிக்கை KK/36/2019

மாவட்ட சுற்றறிக்கை KK/36/2019
தேதி : 08.07.2019

தலைப்பு : உறுப்பினர் அடையாள அட்டை தொடர்பாக‌

அன்பிற்குரிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை என்பது ஒவ்வொரு வருடமும் மாநில தலைமையால், அதற்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொண்டும், ஜமாஅத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதன் அடிப்படையிலும் தரப்பட்டு வருவதை அறிவீர்கள்.

அந்த அடிப்படையில், ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருந்து காலாவதி ஆகியிருந்தாலும் அல்லது புதிதாக உறுப்பினராக இணைந்து கொள்ள விரும்புபவராக இருந்தாலும் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தினை முழுமையாக நிரப்பி, அதனோடு ரூ.100 ஐயும் இணைத்து உங்கள் கிளைக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பாளரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஏற்கனவே காலாவதியான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அதனையும் இந்த விண்ணப்பத்துடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உங்கள் விண்ணப்பப் படிவங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15.07.2019 (திங்கள்கிழமை)

 மாவட்ட நிர்வாகம் ,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்

No comments:

Post a Comment