மாவட்ட சுற்றறிக்கை KK/37/2019
தேதி : 08.07.2019
தலைப்பு : மாவட்ட பொருளாதார நிலை தொடர்பாக
அன்பிற்குரிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்..
நடந்து முடிந்த மாவட்ட பொதுக்குழுவில் உங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட நிதி நிலையை நீங்கள் அறிவீர்கள்.
கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் சுமைகளுடனேயே நிர்வாகத்தினை நாம் செலுத்த வேண்டியுள்ளது.
பல ஆக்கப்பூர்வமான திட்டங்களும், தாவாவினை அதிகரிப்பதற்கான பலவகையான ஆலோசனைகளும் நம் முன் இருந்தாலும் அனைத்திற்கும் பொருளாதாரமே அடிப்படையாக இருக்கிறது என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள்.
நிதி நிலை காரணமாகவே பல திட்டங்கள் ஒத்தி வைக்கப்படுகின்ற அளவிற்கு மாவட்ட நிர்வாகத்தின் நெருக்கடி அமைந்திருப்பதை உங்கள் மேலான கவனத்திற்கு தருகிறோம்.
இந்நிலையினை மேம்படுத்த வேண்டுமானால் கிளை நிர்வாகிகளான உங்கள் ஒத்துழைப்பின்றி எதுவும் சாத்தியமில்லை என்கிற வகையில், மாத சந்தா, ஜகாத் வகைகள், இன்னபிற தாவா வகைக்காக என கிளை சார்பில் நீங்கள் திரட்டித் தருகின்ற மாவட்டத்திற்கான பொருளாதார பங்களிப்புகளை இன்னும் கூடுதல் முனைப்புடன் செய்யுமாறு இந்த் அறிவிப்பின் வாயிலாக உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அதன் மூலம் நமது பொருளாதார நெருக்கடிகள் குறைவதுடன் மேலும் அதிகமான மார்க்கப் பணிகளை நம்மால் செயல்படுத்தவும் அவை துணை புரியும்.
அத்தோடு, அனைத்து கிளை நிர்வாகிகளுக்குமான மாவட்ட மாத சந்தா பங்களிப்பினை குறைந்தபட்சம் ரூ.100 என நிர்ணயிப்பது எனவும் முடிவு செய்திருக்கிறோம்.
இதனையும் கிளை நிர்வாகிகள் கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாகம் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறது. மேலும் உங்கள் கிளை சார்பாக முடிந்த அளவு சந்தாதாரர்களை மாவட்டத்திற்கு ஏற்படுத்தி தருமாறும் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்ட நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்

No comments:
Post a Comment