Wednesday, October 30, 2019

சுற்றறிக்கை ; 642/2019 தேதி : 01.11..2019

சுற்றறிக்கை ; 642/2019
தேதி : 01.11..2019

கிளை   மற்றும்  மாவட்ட  நிர்வாகிகள் கவனத்திற்கு....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

 *சுபஹான மவ்லீத் நோட்டீஸ் குறித்த அறிவிப்பு* ...

ரபியுல் அவ்வல்  மாதத்தில் சுபஹான மவ்லீத்  என்ற பாட்டு தமிழகத்தின் பல பள்ளிவாசல்களில் பாடப்பட்டு வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை புகழ்ந்து பாடுவதாக சொல்லப்படும் சுபஹான மவ்லீத் பாட்டை ஒரு வணக்கமாக எண்ணி செய்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்று தராத  இந்த மவ்லீத் பாடல்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்ட பித் அத் ஆகும்.

அதில் சொல்லப்படும் கருத்துகள் இஸ்லாத்திற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைக்கும்  எதிரான கருத்துக்களே அதில் நிரம்பிக் கிடக்கிறது.

இதனை அறியாமல் பாமர முஸ்லிம்கள்  சுபஹான மவ்லீத் பாட்டை படிப்பது நன்மையான  காரியமாக கருதி  செய்து வருகின்றனர்.

நபி (ஸல்)  அவர்கள்  காட்டித்தராத இந்த காரியத்தை விளக்கும் விதமாக நோட்டீஸ் மாடல் tntj.net ல் உள்ளது.  சுபஹான மவ்லீத் நோட்டீஸை  துண்டுபிரசுரமாக அனைத்து பகுதியிலும் விநியோகிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும்,
இஸ்லாத்திற்கு முரணாக அதிலுள்ள கருத்துக்களை விளக்கி கிளை, மாவட்டங்களில் சிறிய அளவிலான *தெருமுனைக் கூட்டங்கள்,  தெருமுனை பிரச்சாரங்கள்,  மெகாபோன்* *பிரச்சாரங்கள், பெண்கள் பயான்,* *தனிநபர் தாவா* க்களை அதிகப்படுத்தவும்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
 *திருக்குர்ஆன்  3:104*

அல்லாஹ் நம் அனைவரையும்  நற்காரியங்களில்  ஒன்றினைத்து வைப்பானாக.



இப்படிக்கு,
 *இ.முஹம்மது* ,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

No comments:

Post a Comment