*மாவட்ட சுற்றறிக்கை* *KK/65/2019*
தேதி : 05.11.2019
தலைப்பு : *மாவட்ட தர்பியா - பொருளாதார தேவைகள் தொடர்பாக*
அன்பிற்குரிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.
வரும் 23, 24 ஆம் தேதிகளில் அனைத்து கிளை நிர்வாகிகள், அணி செயலாளர்கள் மற்றும் தாயிக்களுக்கான மாவட்ட அளவிலான *தர்பியா வகுப்புக்கள்* ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
நமது தாஃவா பணிகளை மென்மேலும் வீரியப்படுத்தவும், புது யுக்திகளுடன் நமது சமூக நலப் பணிகளை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த தர்பியா வழிகாட்டும் என்பதால் மிகுந்த *முக்கியத்துவம் வாய்ந்த வகுப்பாக* இதனை கருதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இரு நாட்கள் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சியானது *அதிக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்* நடைபெறுகிறது என்பதை உங்களுக்கு அறியத் தருகிறோம்.
இதற்கென தனியே நிதி ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில், நீங்கள் திரட்டித் தருகின்ற பொருளாதார உதவிகளை எதிர்நோக்கியே இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட *1 லட்சம் ரூபாய்* அளவிற்கு இதற்கான செலவீனங்கள் இருக்கும் என கணக்கிட்டிருக்கிறோம்.
எனவே அன்புள்ளம் கொண்ட சகோதரர்கள், உங்களால் இயன்ற பொருளாதார பங்களிப்பினை இதற்காக தந்து உதவுமாறும், கிளை சகோதரர்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களின் பங்களிப்பினையும் திரட்டித் தருமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
- மாவட்ட நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கன்னியாகுமரி மாவட்டம்

No comments:
Post a Comment