Wednesday, April 14, 2021

மாவட்ட சுற்றறிக்கை KK/10/2021

 மாவட்ட சுற்றறிக்கை KK/10/2021

தேதி : 14.04.2021 


தலைப்பு : ஜும்மா வசூல் தொடர்பாக 

அஸ்ஸலாமு அலைக்கும்

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!


நமது  ஜமாஅத்தின் சார்பாக பல்வேறு சமூக மற்றும் மார்க்க தஃவா பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.


ரமலான் மாதத்தின் இரண்டாம் ஜும்மாவினுடைய நிதி வசூல் முழுவதையும் தலைமையின் மார்க்க, சமூக பணிகளுக்காக ஒதுக்குவது என்கிற அடிப்படையில் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இதனை நாம் செயல்படுத்தி வருகிறோம். 


அந்த வகையில் இன்ஷா அல்லாஹ் வரும் 23.04.2021 வெள்ளிக்கிழமை அன்றைய ஜும்ஆ வசூலை அனைத்து கிளைகளும் தலைமை செலவீனங்களுக்காக திரட்டித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.


மாநில நிர்வாகம் சார்பாக செய்யப்படும் முக்கிய பணிகள் சிலவற்றைக் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.


♦️மார்க்க ஆய்வாளர்கள…

[5:46 PM, 4/14/2021] Sheikh: மாவட்ட சுற்றறிக்கை KK/11/2021

தேதி : 14.04.2021 


தலைப்பு : ரமளான் 2021 - மார்க்க அறிவுத்திறன் போட்டி



முதல் பரிசு : 5000/-


இரண்டாம் பரிசு : 3000/-


முன்றாம் பரிசு : 2000/-


ஊக்க பரிசு 20 நபர்களுக்கு.



புனிதமிக்க ரமலான் மாதத்தில் நன்மையை அதிகப்படுத்தும் நோக்கில், தமிழநாடு தவ்ஹீத் ஜமாஅத், கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக மார்க்க அறிவுத்திறன் போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண், சிறியவர் ,பெரியவர் என அனைவரும் இப்போட்டியில் கலந்துக்கொள்ளலாம். வயது வரம்பு இல்லை


கலந்துக்கொள்ளும் நபர்களின் விதிமுறைகள்


1. திருக்குர்ஆனில் இருந்து 100 கேள்விகள் + 

ஹதீஸ்களிருந்து 50 கேள்விகள் கேட்கப்படும்.


2. பதில்கள் ஆதாரத்துடன் இருக்க வேண்டும்.


3. எழுத்துக்கள் தெளிவாக இருக்க வேண்டும். 


4. பதில் எழுதும் முன், ஆரம்பத்தில் உங்கள் பெயர், வயது, முகவரி மற்றும் அலைபேசி எண் தெளிவாக எழுதி இருக்க வேண்டும்.


5. பதில்கள் அனைத்தும், கேள்வி எண்கள் கொண்டு எழுதப்பட்டு இருக்க வேண்டும்.


6. திருக்குர்ஆனிலிருந்து கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் எழுதும் போது பதிலுடன் சேர்த்து  அத்தியாயம் மற்றும் வசன எண்கள்  குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். 


7. ஹதீஸ்களிலிருந்து கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் எழுதும் போது பதிலுடன் சேர்த்து  ஹதீஸ் கிரந்தத்தின் பெயர் மற்றும் ஹதீஸ் எண் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பதில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹதீஸ் நூல்களில் இருந்தால் ஏதாவது ஒரு ஆதாரத்தை குறிப்பிட வேண்டும்.



8.  பதில்கள் அனைத்தும் ரமலான் 29 ஆம் நோன்பிற்கு முன் TNTJ - கன்னியாகுமரி மாவட்டம் அலுவலகத்திற்கு (தபால் / கிளைகள் / மின்னஞ்சல் மூலம் வந்திருக்க வேண்டும்) 


கேள்விகளை PDF ஃபார்மட்டில் கீழே இணைத்துள்ளோம்



குறிப்பு :  ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒரே மதிப்பெண் எடுத்தால் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு அளிக்கப்படும்.


மார்க்க அறிவை மெருகேற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  போட்டியில் முயற்சி செய்து கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் வல்ல இறைவன் அதற்கான கூலியையும்,  அதிக நன்மைகளையும் தருவானாக.



- இப்படிக்கு, 


மாவட்ட நிர்வாகம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

கன்னியாகுமரி மாவட்டம்,

9498844171, 172, 173

No comments:

Post a Comment