சுற்றறிக்கை: 27/2022
தேதி: 05/03/2022
இறைவனின் திருப்பெயரால்...
உக்ரைன் போர்: கைவிடப்பட்ட மாணவர்களுக்கு கைகொடுக்குமா ? இந்திய அரசு.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் உருக்குலைந்து வருகின்றது. பலர் கொல்லப்பட்டுள்ளனர். பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் நாசமாகி வருகின்றது இன்னும் போர் தொடர்ந்து வருகின்றது.
இதன் விளைவாக இந்தியாவிலிருந்து உக்ரைனிற்கு கல்வி படிக்கச் சென்ற மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் உக்ரைனில் பரிதவித்து வருகின்றனர்.
ஒன்றிய அரசு அவர்களை மீட்க முனைப்பு காட்டுவதுவுமில்லை. விமான டிக்கெட் கட்டணத்தை கட்டுபடுத்தவுமில்லை.
இது போன்ற காரணங்களால் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பலியாகியிருக்கின்றார்.
இன்னும் பலர் தாங்கள் எப்படியேனும் மீட்கப்பட வேண்டும் என மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில்
ஒரு சில மாணவர்கள் அவர்களது சொந்த முயற்சியில் இந்தியா திரும்பி வருகின்றனர்.
அவர்களில் அதிகமானோர் மருத்துவம் படிக்கும் மாணவர்கள். ஒரு வழியாக அவர்கள் பாதுகாப்பாக இந்தியா வந்து சேர்ந்து விட்டாலும் அவர்களின் எதிர்காலக் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
நீட் தேர்வின் வருகையாலும், இருக்கும் கல்லூரிகளில் இலட்சக்கணக்கில் பணம் கேட்பதாலும் தான் மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்காக பிறநாடுகளை நாடுகின்றனர்.
அவ்வாறு உக்ரைன் சென்ற மாணவர்களில் தான் ஆயிரக்கணக்கானோர் அங்குள்ள போர் சூழல் காரணமாக தாயகம் திரும்பி வருகின்றனர். ஆதலால் அவர்களது கல்வி தடைபடும் சூழல் ஏற்படுகின்றது.
எனவே மாணவர்களின் முன்னேற்றத்தில் உண்மையிலேயே அக்கறை கொண்ட அரசாக இருந்தால் உடனடியாக மாணவர்களின் படிப்பைத் தொடரச் செய்வதற்கு ஒன்றிய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
அம்மாணவர்கள் படிப்பை நிறைவு செய்வது வரை அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.
பல மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் நீட் போன்ற கொடிய நடைமுறைகளை அகற்றிடவும் ஒன்றிய அரசு முன்வரவேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு:
ஆர். அப்துல் கரீம்.
பொதுச்செயலாளர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
No comments:
Post a Comment